தினகரனை தள்ளிவைத்ததன் பின்னணி காரணத்தை அறிந்துகொண்ட பன்னீர் செல்வம் அதிர்ச்சியில் உள்ளார்.
தற்போதைய நிலவரத்தின்படி, தினகரனை தள்ளிவைத்தால் மத்திய அரசின் கோபம் குறையும், மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
மேலும் பிரிந்துசென்ற பன்னீர்செல்வமும் இணைந்துவிடுவார். வழக்கம்போல் நாங்கள் பின்னால் இருந்து கட்சியை இயக்குகிறோம் என திவாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பன்னீர் செல்வம் காதுகளுக்கு எட்டியதையடுத்துதான், ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால், தினகரனை நீக்கியதாக அறிவித்த பழனிச்சாமி தரப்பு சசிகலா பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை.
முன்னால் உறவையும், பின்னால் குழியை நோண்டும் வேலையும் அந்த அணியினர் செய்வதால் நிதானமாக யோசித்து முடிவவெடுக்கலாம் என்ற நோக்கில் பன்னீர் அணியினர் உள்ளனர்.







