இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற சசிகலா குடும்பம் கட்சியை விட்டு விலகுவது போல நடித்து, அ.தி.மு.க வினரையும், மக்களையும் ஏமாற்ற நாடகம் நடத்துவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது
அதிமுக-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சில வாரங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டது.
இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா சட்டவிதியின் படி அதிமுக பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்படவில்லை என்ற நிலையில் அவர் தேர்வையும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
இது நடந்தால் ஓ.பி.எஸ் கை ஓங்கி சசிகலா குடும்பம் கட்சியை விட்டு வெளியேறும் நிலை வரும்.
இதை தவிர்க்கவே சசிகலா குடும்பத்தினர் ஆலோசனைபடி முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் மன்னார்குடி குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் நாடகத்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்தவுடன் கட்சியை மீண்டும் கைப்பற்றலாம் என்பதே சசிகலா குடும்பத்தின் பலே திட்டமாகும்.
சசிகலா தம்பி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், நாங்கள் கூறியதைத் தான், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்துள்ளனர் என நேற்று கூறியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
கட்சி இணைப்பு நாடகத்தின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருப்பதை அம்பலப்படுத்தி பழனிசாமி தந்திரத்தை, பன்னீர் அணியினர் முறியடித்துள்ளனர்
இதனால் கட்சி இணைப்பு சந்தேகம் தான்!







