பொது மக்களின் நலன் கருதி இன்றைய தினம் அதிகளவிலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக தமது சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ரயிலில் பயணிக்கும் மக்களின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் குழு ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பண்டிகை காலத்திற்காக பயணிகளின் வசதி கருதி விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.