இராணுவம் சார்ந்தவர்கள் அரசியலுக்கு பொறுத்தமற்றவர்கள், கோத்தபாய மற்றும் பொன்சேகா இருவருக்குமே இது பொருந்தும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் கூறினார்.
மேலும், விமல் வீரவங்சவின் உண்ணாவிரதத்திற்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் போராட்டம் செய்யப்படுவது பொறுத்தமற்றது.
இந்த விடயத்தில் விமல் உண்ணாவிரதம் இருக்க மாட்டார் என்றே நான் நினைத்திருந்தேன். முன்னாள் ஜனாதிபதியும் விமல் உண்ணாவிரதம் இருக்க மாட்டார் என்றே நினைத்திருந்தார்.
மற்றும் விமல் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினோம். அதன் மூலம் விமலுக்கு பிணை மறுக்கப்படுவதற்கு அரசியல் காரணங்கள் இல்லை என தெரிந்து கொண்டதாகவும் வாசுதேவ குறிப்பிட்டார்.
மேலும், ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியானது எதிர்வரும் தேர்தலில் தனி இலட்சினை மற்றும் தனிப் பெயரால் தனித்து போட்டியிடும்.
அதேபோல் கோத்தபாய அரசியலுக்கு வரப்போவதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனாலும் இராணுவம் சார்ந்தவர்களும் அரசியலுக்கு எந்த வகையிலும் பொறுத்தமற்றவர்கள்.
சரத் பொன்சேகாவாக இருந்தாலும் கோத்தபாயவாக இருந்தாலும் இருவருக்குமே இது பொறுத்தமானதாகும். எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.







