ஆர்கே நகர் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்றால் தான் அதிமுக அரசியலில் நிரந்தரமாக கால் ஊன்ற முடியும் என்ற நிலையில் தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்கேநகர் தொகுதியில் திமுக கூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக நேற்றிரவு நடந்தது.
ஒரு பக்கம் எதிர்கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டிருக்க, மறுபக்கம் தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர்.
தண்டையார்பேட்டை சி.ஜி.காலனி முதல் தெருவில், 25 வீட்டுக்கு ஒரு நபர் வீதம் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர்.
பட்டுவாடா லிஸ்ட்டை சரிபார்க்கும் பணி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மேற்பார்வையில் நடந்ததாகவும், அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் அதிமுக நிர்வாகிகள் பாஸ்கர், சேகர், வெங்கடேசன், ஜெகன், கு.சதிஷ், இளமதி உடனிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.