ஆர்.கே.நகரில் இறுதி களத்தில் 62 வேட்பாளர்கள்.. இறுதி பட்டியல் ரெடி

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் திமுக, அதிமுக அம்மா கட்சி, அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி, பா.ஜ., தேமுதிக, மார்க்சிஸ்ட் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது.

இந்த தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல்  கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடைந்தது. வேட்பு மனு பரிசீலனை முடிந்து விட்டது. வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.

இந்த நிலையில் தேர்தல் களத்தில் இறுதியாக 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இறுதி பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது, இன்னும் சிறிது நேரத்தில் இறுதி பட்டியல் வெளியாக உள்ளது.