டுவிட்டரில் இணைந்து சில நாட்களிலேயே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒபிஎஸ் தற்போது பேஸ்புக்கிலும் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
டுவிட்டரில், தற்போது சுமார் 65 ஆயிரம் பேர் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக்கிலும் பரப்புரை செய்ய தொடங்கியுள்ள பன்னீர் செல்வம், சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இணைந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.







