வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் விமல் வீரவன்ச

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உடல் நிலை தொடர்பில் வைத்தியர்கள் தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

வைத்தியசாலையில் விமல் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து வைத்தியர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருவதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் இரத்த மாதிரியை வெளியில் பரிசோதனை செய்ய வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் காலை வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய விமல் வீரவன்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்படியிருப்பினும் விமல் தற்போது ஓர் அளவிற்கு சுகமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விமல் தற்போது பான வகைகளை பருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விமலுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையினுள் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை ஜெனரல் ஒருவரின் கீழ் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது