தீபா பேரவையெல்லாம் ஆடிக்காத்தோடு போய்விடும்.. ஓபிஎஸ் ஒருவருக்கே ஆதரவு.. நிர்வாகிகள்

திண்டுக்கல் அருகே தீபா பேரவையை நிர்வாகிகள் கூண்டோடு கலைத்துள்ளனர். ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர்கள் சசிகலாவை எதிர்க்க தகுதியுடையவர் ஓபிஎஸ் ஒருவர் தான் என்றும் தெரிவித்தனர்.

மேலும் தீபா பேரவையெல்லாம் ஆடிக்காத்தோடு போய்விடும் என்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா அதிமுகவை அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என கூறிவரும் அதிமுக தொண்டர்கள் கட்சி அவர் குடும்பத்தின் வசம் சென்றதை ஏற்கவில்லை. இதையடுத்த நடை, உடை, பாவனை, கொண்டை என அனைத்திலும் ஜெயலலிதாவை சசிகலா காப்பியடித்ததால் எரிச்சல் அடைந்த தொண்டர்கள் ஜெயலலிதா சாயலில் இருந்த அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியலில் அத்தையின் இடத்தை நிரப்பும் படி கேட்டுக்கொண்டனர்.

அரசியலுக்கு வந்த தீபா அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் பலப் பகுதிகளிலும் பேரவைகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் தனது பேரவைக்கு எம்ஜிஆர் அம்மா தீபா என பெயரிட்டு கொடியை அறிமுகப்படுத்திய தீபா அரசியலில் தடம் பதித்ததை உறுதி செய்தார். குடும்பத்தில் உண்டான கலகம் இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தீபாவுக்கும் அவரது கணவர் மாதவனுக்கும் மோதல் வெடித்தது. தீபாவின் பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்த மாதவன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார்.

சின்னாளப்பட்டியில் கலைப்பு இந்நிலையில் ஜெ.தீபாவின் செயல்பாடுகள் அவரது கணவரின் தனிக்கட்சி உட்பட குளறுபடிகளை கண்டித்தும், திண்டுக்கல் மாவட்ட ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் கூண்டோடு பேரவையைக் கலைத்துவிட்டு ஓ.பி.எஸ். அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஆடிக்காத்தோடு போய்விடும் இதுகுறித்து சின்னாளபட்டி அதிமுக அவைத்தலைவர் கே.சக்கரபாணி கூறுகையில் சசிகலாவை எதிர்ப்பதற்கு தகுதிவாய்ந்தவர் ஓ.பி.எஸ் ஒருவரே. தீபா பேரவையெல்லாம் ஆடிக்காத்தோடு போய்விடும்.

ஆதரிக்க வேண்டியவர் ஓபிஎஸ் நிரந்தரமாக அதிமுக தொண்டர்கள் ஆதரிக்க வேண்டியவர் ஒ.பி.எஸ் ஒருவரே. அதனால்தான் நாங்கள் தீபா பேரவையை கலைத்துவிட்டு எங்கள் ஆதரவை ஓ.பி.எஸ் அணிக்கு தெரிவித்துள்ளோம்.

விரைவில் மாவட்டம் முழுவதும் கலைப்பு விரைவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தீபா பேரவை நிர்வாகிகள் ஓ.பி.எஸ் அணிக்கு மாறுவார்கள் என்றார்.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் தீபா பேரவை கலைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் தீபா பேரவை கூண்டோடு கலைக்கப்பட்டிருப்பது தீபா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.