கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தை பிடித்தார் புஜாரா

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியபோது பதிலடியாக இந்தியாவின் புஜாரா 202 ரன்கள் குவித்தார்.

புஜாரா இரட்டை சதம் அடித்ததால் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். புஜாரா 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், விராட் கோலி 826 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 823 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பாகிஸ்தானின் அசார் அலி 779 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், யூனிஸ்கான் 772 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், டேவிட் வார்னர் 768 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா மற்றும் குயிண்டான் டி காக் முறையே 9-வது இடத்தையும், 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.