ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடம்

சர்வேதச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே முதலிடத்தில் இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி அசத்திய ஜடேஜா அதிக விக்கெட்களை கைப்பற்றினார். இரு அணிகள் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமாக 9 விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து டெஸ்ட் பவுலர்கள் பட்டியலில் 899 புள்ளிகளை பெற்று சர்வதேச டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 862 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.