ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
இன்று அதிகாலை தமது விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, இன்று முதல் எதிர்வரும் 24ம் திகதி வரையில் அவர் ரஷ்யாவில் தங்கி இருப்பார் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
அத்துடன் நாளைய தினம் விளாடிமிர் புட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







