இராணுவ சீருடை என்ற போர்வையில் ராஜபக்சவினருக்காக கூலிக்கு கொலை செய்தவர்களை படையினர் என்று கூறுவது உண்மையான படை வீரனை அவமதிக்கும் செயல் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவினர் ஒரு தசாப்த ஆட்சியில் இராணுவத்தினர் என்ற போர்வையில் சிலர் ராஜபக்சவினருக்காக கூலிக்கு கொலைகளை செய்தனர்.
இவர்களை படையினர் என்று கூறுவது உண்மையான படைவீரனுக்கு செய்யும் பாரதூரமான அவமதிப்பாகும்.
இந்த குற்றவாளிகள் செய்த அனைத்து குற்றச் செயல்கள் தொடர்பான சகல தகவல்களும் என்னிடம் இருக்கின்றது.
அவை அனைத்தையும் வெளியிட்டு இந்த குற்றவாளிகளை படை வீரர்கள் என முத்திரை குத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக போராடப் போவதாகவும் ஜனாதிபதிக்கு இது குறித்து புரிய வைத்து இந்த குற்றவாளிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கப்பம் பெற்று, பணத்திற்கு கொலைகளை செய்து. போருடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஊடகவியலாளர்களை கொலை செய்து, காணாமல் போக செய்த இவர்களை எப்படி படையினர் எனக் கூற முடியும்.
ஊடகவியலாளர்களை தாக்கி, கொலை செய்தவர்களை இராணுவத்தினர் எனக் கூறினால், மற்றவர்களை எப்படிஅழைப்பது. அவர்களை அழைக்க வேறு ஒரு பெயரை சூட்ட வேண்டும் எனவும் அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.