தமிழகத்தில் மறைமுக ஆட்சி செய்யும் குற்றவாளி சசி-அதிமுக பொதுச்செயலராக நீடிக்க தடை கோரி அதிரடி வழக்கு!

தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்யும் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக நீடிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஆறுமுகம் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகம் இன்று தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது,
ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் எம்.எல்.ஏ.வாகவோ முதல்வராகவோ ஆக முடியாது என்கிறது சட்டம். ஆனால் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி சசிகலா தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சியை நடத்துகிறார்.

பெங்களூரு சிறையில் இருந்து கொண்டே அதிமுக ஆட்சியையும் 122 எம்.எல்.ஏக்களையும் வழிநடத்துகிறார் என அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூறுகின்றனர். ஆகையால் சசிகலா அதிமுக பொதுச்செயலர் நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.