கடைசி இரண்டு டெஸ்ட்: ஹர்திக் பாண்டியா மட்டும் அணியில் இருந்து விடுவிப்பு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3-வது மற்றும் நான்காவது போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 16-வது வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா மட்டும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராஞ்சி ஆடுகளம் ஸ்லோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. இதனால் விஜய் ஹசாரா தொடரில் விளையாடுவதற்காக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாண்டியா ஏற்கனவே முதல் டெஸ்டின் போதே விடுவிக்கப்பட்டார். அவர் மூன்று லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். பரோடா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.

கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி விவரம்:-

1. விராட் கோலி (கேப்டன்), 2. முரளி விஜய், 3. லோகேஷ் ராகுல், 4. புஜாரா, 5. ரகானே, 6. கருண் நாயர், 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. சகா (வி.கீ.), 10. இசாந்த் சர்மா, 11. உமேஷ் யாதவ், 12. ஜயந்த் யாதவ், 13. புவனேஸ்வர் குமார், 14. குல்தீப் யாதவ், 15. அபிநவ் முகுந்த்.