ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்படும்போது, அவருடைய இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்துள்ளது.
மறைந்த முன்னாள் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10 மனியளவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அனுமதிக்கப்படும்போது அவர் மூச்சு எடுக்க முடியாமல், மயக்கநிலையில் இருந்தார் என தற்போது வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை அட்மிட் செய்தபிறகு, அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அப்போது அவருடைய இரத்த சர்க்கரை அளவும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இரத்த சர்க்கரை அனைவரும் அதிர்ச்சியடையும் விதத்தில் 560mg/dl என்னும் அளவில் இருந்துள்ளது.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இத்தனை அதிகமான அளவு இரத்த சர்க்கரை இருந்தபோது, அதை கட்டுபடுத்த அவருக்கு வீட்டில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் உயர்தர சிகிச்சை, உணவு கிடைக்கவில்லையா? தோல் நோய்க்கு அதிக அளவு ஓரல் ஸ்டீராய்டு மருந்தை பரிந்துரைக்க காரணம் என்ன? என்ற அடிப்படையான, மிக முக்கியமான கேள்விகளுக்கு டாக்டர் சிவக்குமாரால் மட்டுமே பதிலளிக்க முடியும். ஆனால், அவர் பதிலளிப்பாரா?







