டெஸ்டில் கிரிக்கெட்டில் விரைவாக 25 முறை 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை

பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அஸ்வின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது.

முதல் இன்னிங்சில் 49 ஓவர்கள் வீசி 84 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அவர், 2-வது இன்னிங்சில் 12.4 ஓவர்கள் வீசி 41 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் 25-வது முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். பெங்களூரு டெஸ்ட் அஸ்வினுக்கு 47-வது டெஸ்ட் ஆகும். இதுவரை 269 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

47 டெஸ்டில் 25 முறை 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதன் மூலம் விரைவாக ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ரிச்சார்ட் ஹாட்லி 62 போட்டியிலும், முத்தையா முரளீதரன் 63 போட்டியிலும் விளையாடி 25 முறை ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தனர்.