பாடசாலை சீருடையின் வடிவமைப்பு மற்றும் நிறங்களை மாற்ற வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாகாணங்களிலும் நிலவும் காலநிலைக்கு பொருத்தமான வகையில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாணவர்களின் மனதில் சுதந்திரம் ஏற்படும் வகையில் ஆடை உருவாக்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.







