தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சுவாசக்கருவியை அகற்றியது தான் மரணத்திற்கு காரணம் என்று அப்பல்லோ நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரும் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார். அவர் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த ஜோசப் என்பவர் நீதிமன்றத்தை நாடி ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அப்பல்லோ தரப்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் மக்களுக்கு அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நீதிமன்றம் அப்பல்லோவை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் அப்பல்லோவோ அறிக்கை தாக்கல் செய்யாமல் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளதாக இணையதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
அதில் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி தானாக அகற்றப்பட்டதால் தான் அவர் உயிர் பிரிந்தது என அப்பல்லோ நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ஜெயலலிதாவின் சுவாசக் கருவி தானாக அகற்றப்பட்டதா இல்லை வேறு யாரேனும் அதை அகற்றினார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பி வருகின்றனர்.
இதற்கு அப்பல்லோ தரப்பில் இருந்து விளக்கம் அளித்தால் இது உண்மையா அல்லது யாரேனும் வேண்டுமென்றே கிளப்பிவிட்ட வதந்தியா என்பது தெரியவரும்.







