பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் நடிகர் நடிகைகளையும் போலியாக கோர்த்துவிடும் வேலைகள் நடைபெற்று வருவதால் தமிழக நட்சத்திரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, நடிகர் கமல், டுவிட்டர் வாயிலாக ஆதரவு தெரிவித்தார். நடிகர் விஜயும், டுவிட்டரில் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் பரவியது.
ஆனால், அது என் டுவிட்டர் பக்கம் அல்ல, மர்ம நபர்கள் போலி கணக்கு துவங்கி வதந்தி பரப்புகின்றனர் என விஜய் தரப்பில் கூறப்பட்டது.
கமல், விஜய் மட்டுமின்றி விஷால், நடிகையர் த்ரிஷா, நயன்தாரா உட்பட சினிமா பிரபலங்கள் பலரது பெயரில் மர்ம நபர்கள், டுவிட்டரில் போலி கணக்குகள் துவங்கி உள்ளனர்.
அவர்கள் சசிகலா, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி வருவது நடிகர், நடிகையரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதுகுறித்து, பொலிசாரிடம் புகாரும் அளித்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.







