எனக்கு எப்போது திருமணம்? உண்மையை உடைத்த ராகுல்காந்தி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், ராஜிவ்காந்தி மற்றும் சோனியாகாந்தி தம்பதியின் மகனுமான ராகுல் காந்திக்கு தற்போது 46 வயதாகிறது

இதனால் ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் நடக்கும் என்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட பலரும் கடந்த சில வருடங்களாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராகுல் காந்தியிடம் தொண்டர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ராகுல் காந்தி தன்னுடைய திருமணத்திற்காக இனி அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை என பதில் அளித்துள்ளார்.

மேலும் ராகுல்காந்தி வெளிநாட்டு பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகின.

இதனால் இதற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் விரைவில் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.