சும்மா சீன் போடாதீங்க, தீபாவிற்கு நடிகர் ஜீவா மரணக் கலாய்….

உங்களுக்கு அரசியல் ஆசை இருந்தால் அந்த நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை அவருக்கு பதிலாக நீங்கள் அனுபவித்து உங்கள் தலைவி மீதுள்ள களங்கத்தை போக்கிவிட்டு அரசியலுக்கு வாருங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள். தீபாவுக்கு, என் தாழ்மையான வேண்டுகோள். தமிழக மக்கள் ஐம்பது ஆண்டுகளாக ஏமாந்தது போதும்.

உங்கள் சுயநலத்திற்காக கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை நீங்களும் ஏமாற்றாதீர்கள் !இப்படி நேற்று ஒரு அறிக்கை விட்டார் நடிகர் ஜீவா.

நேற்று இரவு இரவு ஜீவா இன்னொரு அறிக்கை விட்டார்.தீபாவின் பேரவைப் பெயர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை.

அதை நக்கல் அடித்தவர் என்னது எம்ஜிஆரின் அம்மா தீபாவா..? சுருக்கிச் சொன்ன ‘மேட்’ அப்படின்னு வருது. யாருங்க தீபா மேடம் பைத்தியம்? உங்க வீடு வாசல்ல நின்ன ஆயிரக் கணக்கான மக்களா? இல்ல நீங்களா.?

உங்கள் நோக்கம்,ஆசை எல்லாம் எங்களுக்கு தெரியும். சும்மா சீன் போடாதீங்க. என்னையும் அரசியல்வாதி ஆக்காதீங்க என்று காரசார அறிக்கை ஒன்றை விடுத்தார்.

எல்லாம் சரிங்க உங்களுக்கு எப்போ அரசியல் ஆசை வந்துச்சு..? ஒரு விஷால் போதாதா என்கிறார்கள் நெட்டிசன்கள்.

(நடிகர் ஜீவாவும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரியாது)