தமிழக அரசியலில் ஊழல் ராணியாகப் பார்க்கப்படுபவர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா.
இவா் 30 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்தார் என்கிற ஒரு காரணத்துக்காக தற்போது அதிமுகவை கைப்பற்றிவிட்டார்.
அதனை வைத்தே தமிழகத்தின் முதல் அமைச்சராக வேண்டும் என்கிற கனவோடு உலா வந்தார். அது கனவாகவே போனது.
உச்சநீதி மன்றம் சிறையில் தள்ளியது. முதல்வர் சமாதியில் 3 முறை அடித்து சபதம் செய்தார்.
ஏதோ அவா் உண்மையை வெளியே கொண்டு வருவேன். நம்மீது ஏற்பட்ட களங்கத்தை அகற்றுவேன் என்று நினைத்து சபதம் செய்து இருப்பார் என்று நடுநிலை அரசியல்வாதிகள் எண்ணினா்.
ஆனால், இனி தமிழகத்தை குழி தோண்டி புதைப்பேன் என்றுதான் சத்தியம் செய்துள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அதாவது கா்நடாக பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினா்களுக்கு, சாதாரண கைதிக்கு உள்ள கவனிப்புதான் நேற்று வரை வழங்கப்பட்டதாம்.
இந்த கொடுமையை தாங்க முடியாத சசி, கதறி அழுது துடிக்கிறாராம். இதில் இருந்து என்னை மீட்டுச் செல்லுங்கள் என்று கூறி வருகிறாராம்.
இந்த நிலையில்தான் கா்நாடக அரசு சூட்சமம் செய்ய நினைத்தது. உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்.
இதற்கு பதிலாக நீங்கள் கா்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே கட்டவுள்ள அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.
பாராளுமன்றத்தில் உங்கள் எம்பிக்கள் பேசக்கூடாது அணைக்கு தடையாக தமிழகம் இருக்கக்கூடாது என்கிற கோரிக்கையை வைத்தனா்.
எவனோ, எதுவோ, நாசமாகப்போனால் எனக்கு என்ன, நான் நலமாக இருந்தால் போதும், நான் அனைத்தையும் செய்து தருகிறேன் என்று வாக்குறுதியும் அளித்ததாக பரப்பன அக்ரஹார ஜெயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது குடும்ப நலத்திற்காக அதிமுக என்கிற கட்சியையும், அதன் தலைவியையும் அழித்தார் சசிகலா.
தற்போது தனது நலனுக்காக காவிரியில் அணைக்கட்ட அனுமதி அளித்து, தமிழகத்தையே சுடுகாடாக மாற்ற துணிந்துவிட்டார். இனி தமிழகம் என்னாகுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.
இவ்வாறு தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.