மேகதாது அணை உட்பட தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தை பாதிக்கும் கர்நாடகாவின் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது. ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை பெற மத்திய நீர்வள ஆணையத்தை அணுகவும் கர்நாடகா திட்டமிட்டுள்ளது.
மேகதாது உள்ளிட்ட எந்த அணை திட்டத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என்றும், அணைகட்ட அனுமதி பெற மத்திய நீர்வள ஆணையத்தை அனுக கர்நாடக திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.