‘நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சுயாதீனமாக இயங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு அரசியலில் அடைக்கலம் கொடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்’ என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய வளப்பாதுகாப்பு மத்திய நிலையம் நேற்று (வியாழக்கிழமை) நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அபயராம விகாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மேலும் விமல் வீரவன்ச தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளாரே தவிர எம்முடன் எப்போதும் இணைந்தே செயற்படுவார்.
அரசியலில் அவருக்கான ஆதரவை நாம் தொடர்ந்து வழங்குவோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகியதன் பின்னர், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றில் செயற்படும் கட்சியாக அங்கீகரிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.







