நாட்டை பாரிய கடன் சுமையோடு நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெட்கமில்லாமல் கேள்வி கேட்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த அரசாங்கத்தின் போது நாடு 9.7 பில்லியன் ரூபாய் கடனில் மூழ்கியிருந்தது.
கடனை மீள செலுத்தும் அளவுக்கு நாட்டில் வருமானம் இல்லை. இவ்வாறான நிலையில், நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனில் என்ன செய்துள்ளது என மஹிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
அவரை போலவே என்னாலும் கேள்வி கேட்க முடியும். கடந்த அரசாங்கத்தின் போது நாட்டின் பொருளாதாரத்திற்காக மஹிந்த என்ன செய்திருக்கின்றார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தின் போது ஹம்பாந்தோட்டை மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டது. எனினும், தற்போது நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தெரிந்த விடயங்களை மட்டுமே பேச வேண்டும். தெரியாத விடயங்கள் குறித்து பேச வேண்டாம். எவ்வாறாயினும், ஆதரங்களுடன் மஹிந்த கருத்துகளை முன்வைப்பாராக இருந்தால் அதற்கு பதில் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.