புதிய அரசியலமைப்புக்கு தடையாக இருப்பவர்கள் யார்?

புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்திற்கு மஹிந்த அணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொது பல சேனா ஆகியன பாரிய சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சவாலின் காரணமாக கருத்துக் கணிப்பில் தோல்வி அடைந்துவிடக்கூடும் என்ற ஐயம் முன்வைக்கப்படுகின்றபோதும், அதில் வெற்றிபெற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, போர்க்குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டால், அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.