தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி அலை.. மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது.

மிக மிகத் தாமதமாக கிடைத்துள்ள தீர்ப்பாக இருந்தாலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலாவின் செயல்பாடுகளால் பெரும் கடுப்பில் இருக்கும் மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்