நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது?

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல், நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

தங்கல்லையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

இன்று மக்களின் வாழ்வதற்கான உரிமை தடைப்பட்டுள்ளது. அரசாங்கம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை தீர்மானித்துள்ளது.

இருப்பினும்,  அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கு சந்தையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. இன்று சந்தையில் அரிசி ஒரு கிலோ 100 ரூபாவையும் தாண்டியுள்ளது.

மத்தளை விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக மாற்றுவதாக கூறிய அரசாங்கத்துக்கு என்ன நடந்தது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் மக்களுக்கு வழங்கிய நலன்கள் என்ன? உள்ளுராட்சி சபைத் தேர்தலைத் தள்ளிப் போட்டு வருகின்றது.

நடாத்தினால் தோல்வியைச் சந்திக்க வேண்டி வரும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். நாட்டின் அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்.

இந்த நாட்டின் நிருவாகம் குழப்பம் நிறைந்ததாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் பொருட்களின் விலை அதிகரிக்கின்றது.

நாளுக்கு நாள் தேர்தலை பிற்போட்டு வருகின்றனர். அரசாங்கம் இதனைத் தான் மக்களுக்காக செய்து வருகின்றது. இன்று அல்லது நாளை உள்ளுராட்சி சபைத் தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர் இவ்வளவுதான் எனவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.