நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம்!

அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது ஆலையிலிருந்து அரிசியை, வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் எதிர்வரும் நாட்களில் கடுமையாக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலையை விதித்து வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்ட நிலையில் அரிசியை அந்த விலைக்கு விற்க முடியாது என தெரிவிக்கும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பழைய விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் நிலையில் பல இடங்களில் ஏற்கனவே அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.