வைத்தியராக மாறிய மஹிந்தவின் மனைவி! சர்ச்சைக்குரிய கல்லூரியில் பட்டம் பெற்றாரா?

அண்மைக்காலமாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அதிகம் ஊடகங்கள் வாயிலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் அங்கு மருத்துவ கல்வி கற்றாரா என கொழும்பு ஊடகம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் மருமகளான சமன்மலி கலகசூரியவினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களின் அடிப்படையில் இந்த சந்தேகம் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் வைத்தியம் பார்க்கும் புகைப்படங்கள் சில பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடும்ப விருத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ பங்கேற்றார்.

இதன்போது தற்போது சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள சைற்றம் தனியார் கல்லுரி குறித்து கலந்துரையாடியுள்ளார்.

பேஸ்புக்கில் வெளியான ஷிரந்தியின் புகைப்படங்களை நன்கு அவதானித்த வாசுதேவ நாணயக்கார, ஷிரந்தி கற்றதும் சைற்றமிலா எனத் தெரியவில்லை. இவர்களினால் தான் அந்த நபருக்கு வீட்டிற்கு செல்ல நேரிட்டுள்ளதெனன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

வாசுதேவவின் கருத்தினை அடுத்து சைற்றம் கதையிலிருந்து வேறு கதைக்கு திசை திருப்பும் முயற்சியில் தினேஷ் ஈடுபட்டதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.