மஹிந்தவின் பிரஜாவுரிமையை எவராலும் பறிக்க முடியாது!

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பிரஜாவுரிமைகளை ரத்து செய்வதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவ்வாறான யோசனையொன்றை கொண்டுவருவதற்கு அவசியம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பதுளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

இதன்போது. சைட்டம் கல்வி நிறுவனம் தொடர்பாகவும் அவர் கருத்து வௌியிட்டார்.