பிரான்ஸ் நாட்டை உங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்த வேண்டாம்! டிரம்புக்கு அதிரடி எச்சரிக்கை!!

பிரான்ஸில் இல்லாத தீவிரவாதத்தை இருப்பதாக கூறவேண்டாம் என டொனால்டு டிரம்பை பார்த்து பிரான்ஸ் நாட்டின் இளம் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் லூவர் அருங்காட்சியகம் அருகில் ஒரு மர்ம நபர் கத்தியுடன் வந்தான்.

பின்னர் அங்கிருந்த காவலாளியை அவன் கத்தியால் குத்த, அங்கிருந்த பொலிசார் அவனை சுட்டனர்.

மருத்துவமனையில் இருக்கும் அவன் பெயர் Abdallah El Hamahmy (29) என்பதும், எகிப்து நாட்டை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், இஸ்லாமிய தீவிரவாதி இதை செய்ததாகவும்,பிரான்ஸ் ஆபத்தில் உள்ளதாகவும், அந்த சமயத்தில் சுற்றுலா பயணிகள் அடைத்து வைத்திருக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இதை மறுக்கும் விதத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Engie Wild என்னும் இளம் பெண் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

அதில், டிரம்ப் அவர்களே உங்கள் அக்கறைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல சுற்றுலா பயணிகளை அந்த சமயத்தில் யாரும் அடைத்து வைக்கவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிசார் தான் அவர்களை அறையின் உள்ளே வைத்திருந்தனர்.

உங்கள் சுயநலத்துக்காக இப்படி பிரான்ஸ் நாட்டின் பெயரை உபயோகப்படுத்தாதீர்கள்.

மேலும், கத்தி குத்து நடத்தியவன் எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்றும் நீங்கள் தடை விதித்த 7 நாட்டுகளை சேர்ந்தவர் இல்லை எனவும் டிரம்புக்கு அவர் கூறியுள்ளார்.

மேலும், எகிப்து நாட்டு மக்களை நீங்கள் தடை செய்யததன் காரணம் உங்கள் தனிப்பட்ட சுயநலத்துக்கா? என கிண்டலாக அவர் கூறியுள்ளார்.