ஆமை இறைச்சி; ஐவர் கைது!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிஇ பள்ளிக்குடா பகுதியில் கடலாமை இறைச்சி மற்றும் கடலாமை முட்டைகள் என்பவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த 05 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நண்பகல் வேளை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6.5 கிலோகிராம் கடலாமை இறைச்சி மற்றும் 2.5 கிலோகிராம் கடலாமை முட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் நடைபெ ற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் தடயப்பொருட்களுடன் சந்தேக நபர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன் றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.