நீதிமன்றினை அவமதித்த விமல் ஆதரவாளர் சிறைக்குள்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட நபருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிரக வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொது ஊழியரை தடுத்தல் மற்றும் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக இன்றைய தினம் பொலிஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இருப்பினும், சந்தேகநபரான சுதேஷ் பிரேமலால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே, சந்தேகநபருக்கு ஒன்றரை வருட சிறை தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்

பொது ஊழியரை தடுத்தமைக்கு 6 மாத சிறையும் 1000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதுடன், நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்காக ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.