மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இன்று விளக்கம் அளித்தனர்.
அப்போது, ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின்போது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், “ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது என்பது வழக்கமான நடவடிக்கை தான். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமசந்திரனும் இதேபோல் செய்யப்பட்டது. முக்கியமான தலைவர்களுக்கு இதேபோல் செய்யப்படும்” என்றனர். உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது என்று மருத்துவர் சுதா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வருவதால் தற்போது விளக்கம் அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.