மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் குழுவினர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
அப்போது, சிகிச்சையின் போது ஜெயலலிதாவை சந்தித்தவர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நாள்தோறும் சசிகலாவிற்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. சசிகலா தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரை சந்தித்தனர்.
பார்க்க விரும்புவர்களின் பெயரை எழுதி காட்டுவோம். ஜெயலலிதா சம்மதித்த சிலரை மட்டும் பார்க்க அனுமதித்தோம்” என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறையின் கதவில் இருந்த கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்தார். அப்போது ஆளுநரை ஜெயலலிதாவும் பார்த்தார் என்று கூறினர்.
ஜெயலலிதா தொலைக்காட்சியை பார்த்தது, தயிர் சாதம் சாப்பிட்டது உண்மை என்று மருத்துவர் பாபு கூறினார்.
இதனிடையே, தன்னுடைய குடும்பத்தை ஜெயலலிதா விசாரித்ததாக மருத்துவர் பீலே கூறினார்.







