ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மருத்துவர் ரிச்சர் பீலே விளக்கம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் நோய் பற்றியும் விளக்கம் அளித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பீலே மற்றும் மருத்துவ குழுவினர் உரிய விளக்கம் அளித்தனர்.

அவர்கள் அளித்த விளக்கம்:-

முதலில் காய்ச்சல் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு கொண்டு வரும்போது ஜெயலலிதா சுயநினைவில் இருந்தார்.

நோய் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா

ஜெயலலிதாவின் இதயத்தில் தொற்று நோய் அதிகமாக இருந்தது.

செப்சிஸ் நிலை ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்பட்டன.

சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது.

நோய் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்திருந்தார்.

தேர்தல் குறித்த ஆவணத்தை ஜெயலலிதா படித்து பார்த்தார்.

அக்.22ல் நான் கைரேகை பெறும்போது ஜெயலலிதா பேசினார்.

டிரக்கியோஸ்டோமி செய்த பின் நினைவு திரும்பியது.

முழுமையான சிகிச்சைக்குப் பின் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார்.

நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இவ்வாறு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.