தெற்கில் ஜனநாயகத்திற்காக போராடும் போது வடக்கிலும் வடக்கு மக்களின் உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டும் என்று மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கிலுள்ள மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கா விட்டால் வடக்கு இனவாதிகளின் இருப்பிடமாக மாறிவிடும், பிறகு யாராலும் வடக்கை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையில் காணப்படும் இனவாதங்களை குறிப்பதற்கு தெற்கில் உள்ள தலைவர்கள் எவ்வாறு செயற்படுகின்றார்களோ, அதே நடவடிக்கைகளை வடக்கிலும் முன்னெடுக்க வேண்டும்.
நாட்டில் காணப்படும் பேரினவாதம், இனவாதம் போன்றவற்றுக்கு எதிராக போராடும் போது வடக்கு, தெற்கு என்று பிரித்துப்பார்க்க முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர அறிவித்துள்ளார்.