மஹிந்தவை ஆட்டங்காண வைத்துள்ள நாமல், யோஷிதவின் நண்பர்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்சவினால் மீண்டும் மஹிந்தவின் அரசியல் பயணத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் தொடர்பில் எவ்வித அனுபவமும் அற்ற ஷிரந்தி ராஜபக்ச, தனது புதல்வர்களான நாமல், யோஷித மற்றும் அவர்களது ஆதரவாளர்களை முன் கொண்டுவருவதற்கு முயற்சிப்பதனால் தற்போது மஹிந்தவும் அவரது அரசியல் நடவடிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. அண்மையில் நுகேகொட நடந்த பேரணி மூலம் அது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையில் மஹிந்தவுக்காக சிவில் சமூகத்தினர் மற்றும் மற்றும் சமூக ஊடகங்களில் பாரிய நடவடிக்கை மேற்கொண்டு வந்தவர்கள் நாமல் மற்றும் யோஷிதவின் நணபர்கள். சிங்கள பிரபல பாடகரின் குழு மற்றும் காஞ்சனா விஜேசேகர ஆகியோர் இணைந்து கடந்த நுகேகொட பேரணியில் ஆதிக்கம் செலுத்தி அனைத்தையும் தங்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதற்காக முழுமையான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆரம்ப காலங்களில் இருந்தே மஹிந்தவுக்கு நெருக்கமான செயற்பட்ட இளைஞர் குழுவுக்கு நாமல் மற்றும் யோஷிதவின் நண்பர்கள் எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கூட்டு எதிர்கட்சியினர் மீண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதா, என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர். இதன்மூலம் பெருமளவான இளைஞர் குழுவினர் மஹிந்தவை விட்டு விலக ஆயத்தமாகியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.