கேப்பாப்பிலவு மக்களின் காணிகளில் 235 ஏக்கர் விடுவிப்பதாக அரசும் இராணுவமும் கூறியது முழுவதும் பொய்யான தகவலாகும். கேப்பாப்பிலவு மக்களுக்குரிய காணிகளில் ஒரு ஏக்கர் நிலம் கூட விடுப டவில்லை என்பதே உண்மை என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில்,
கேப்பாப்பிலவு என்பது வன்னிப் பெருநிலப்பரப்பின் பூர்வீகக் கிராமங்களில் ஒன்றாகும். இது தொடர்பாக இலங்கை பிரித்தானிய காலனித்துவத்துக்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கையை நிர்வகித்த பிரித்தானிய ஆளுநர்களில் ஒரு வரான து.P.லூயிஸ் என்பவர் தன்னுடைய அயரெயட ழக வாந எயnni னளைவசiஉவள என்ற நூலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
நந்திக்கடல் களப்பையும் வளம்சேர் நிலப்பகுதியையும் கொண்ட இக்கிராமத்தில் இயற்கையோடொன்றி அமைதியான வாழ்வை நடாத்தி வந்த இக்கிராமத்தின் பூர்வீகக்குடிகளை 2009இல் நடந்து முடிந்த கொடிய போர் இடம்பெயரச் செய்தது.
2016இல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறிய போதும் கேப்பாபிலவு மக்களுக்கு சொந்த இடத்திலான மீள்குடியேற்றம் என்பது எட்டாக்கனியானது.
இவர்களுடைய குடிநிலங்கள், விளைநிலங்களை முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் ஆக்கிரமித்துக் கொண்டது. இவர்கள் தமது சொந்தக் கிராமத்தின் அருகே உள்ள சீனியா மோட்டைக் கிராமத்தில் வழங்கப்பட்ட 20P காணிகளில் வீடுகள் என்ற பெயரில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட 350000.00 ரூபா பெறுமதியான கூடுகளில் வற்புறுத்திக் குடியமர்த்தப்பட்டன.
கண்ணெதிரே தமது பூர்வீகக் காணிகளில் தம்மால் நடப்பட்ட வான் பயிர்கள் காய்த்து கனிந்து குலுங்குவதையும் அங்கு இராணுவம் உல்லாச வாழ்வு வாழ்வதையும் ஏக்கத்துடன் பார்த்து இவர்களது வாழ்வு கழிந்து வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் சாசனங்கள் விதிகளுக்கமைய கேப்பாபிலவு மக்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களாகவே இன்றும் கருதப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். இருந்த போதும் முல்லைத்தீவு மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் இவர்களை மீள்குடியமர்ந்தவர்களாகவே காட்டி நிற்கின்றதும் வேதனையை தரும் விடயமாகும். கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அடிக்கடி போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனால் வடக்கு மாகாண மாண்பமை முதலமைச்சர் அவர்கள், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவினரை இப்பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக நியமித்தார். இக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது இராணுவத்தினர் தமது இராணுவத் தலைமையகத்தை தற்போது அமைந்துள்ள இடத்திற்கு தென்மேற்காக நகர்த்த வேண்டும் என்றும் கேப்பாபிலவு மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டுமெனவும் விதந்துரைத்தது.
இவ்வறிக்கையின் நகல்கள் முதலமைச்சர் அவர்களால் நல்லாட்சி அரசின் சனாதிபதி அவர்கட்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் உசைன் அவர்கட்கும் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கக்கூடிய நாடுகளின் தலைவர்கட்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனால் இராணுவத்தினர் தமது முல்லைத்தீவு மாவட்ட தலைமையகத்திற்கு கேப்பாபிலவு மக்களை அழைத்து அவர்களது குடியிருப்பு காணிகளை தாம் விடுவிக்க உள்ளதாக நம்பிக்கையூட்டி அவர்களது போராட்டத்தை தளர்வடையச் செய்தனர். ஆனால் இவர்கள் கேப்பாபிலவு மக்களின் குடியிருப்புக் காணிகளில் ஒரு சதுர அங்குலத்தை கூட விடுவிக்கவில்லை.
சீனியாமோட்டைப்பகுதியில் வற்றாப்பளை மக்கள் 42 பேருக்கு சொந்தமான 78ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச்செய்கைக்குரிய காணிகளும், சூரிபுரம் பகுதியில் தற்போது இலங்கையில் இல்லாத ஒருவருக்கு சொந்தமான 70ஏக்கர் காணியையும் இன்னொருவருக்குச் சொந்தமான 6ஏக்கர் காணியையும் மொத்தமாக 154ஏக்கர் காணிகளே 25.01.2017 இல் வித்தியானந்தா கல்லூரியில் வைத்து விடுவிப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளாகும்.
ஆனால் அன்றைய தினம் 235ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தால் பொய்ப்பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இது இலங்கை இராணுவத்தின் கூற்றுக்களின் நம்பகத்தன்மை அற்ற நிலையை காட்டி நிற்கின்றது. வெளிப்படையாக நன்றாகத்திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் 25.01.2017 அன்று அமைதிவழிப்போராட்டம் ஒன்றை தமது கிராமத்தில் நடாத்தினார்கள். இனிவரும் நாட்களில் அம்மக்களை எவரும் ஏமாற்ற முடியாது. என அவர் மேலும் தெரிவித்தார்.