‘பிரெக்ஸிட்’ போல இலங்கையிலும் : தைரியம் இருக்கிறதா? வாசுதேவ கேள்வி

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டால் ‘பிரெக்ஸிட்’ போல அரசாங்கம் வெளியேற வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

நுகேகொடைக்கு வந்த மக்கள் கூட்டம் எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்திற்கும் மேலாக இருந்தது. ஆட்சிக் கவிழ்ப்பின் ஆரம்பமே இதுவாகும்.

இந்த நிலையில், இந்த அரசாங்கம் இருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும்.

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் மக்கள் சாதகமான பதிலை வழங்கினால், ஆட்சியை நிலைநிறுத்தலாம். இல்லாவிட்டால், ‘பிரெக்ஸிட்’ போல அரசாங்கம் வெளியேற வேண்டும்.

இதை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு தைரியம் இருக்கிறதா? இல்லை என்று வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.