ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என கடந்த எட்டு நாட்களாக நடந்த மாணவ புரட்ச்சியால் மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசரசட்டமும் அதைத் தொடர்ந்து நேற்று நிரந்தர சட்டமும் இயற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி, ஜால்லிக்கட்டு நடத்த அவ்வூர் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கென தனி கேலரி அமைக்கப்படும். அங்கு அமர்ந்து மாணவர்கள், ஜல்லிக்கட்டை காணலாம் என விழா கமிட்டி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மாணவர்களின் தன்னலமில்லா போராட்டத்தினை வரலாற்றில் பதிய வைக்கவும் நினைவுகூறவும், அலங்காநல்லூரில் நினைவுசின்னம் அமைக்க வேண்டும் என்று விழா கமிட்டியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகவும் உள்ளது.







