36 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா கடத்தல்!

அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பிற்கு  கடத்தி செல்லப்பட்ட  கேரள கஞ்சா பொதிகளுடன் 3 பேரை மன்னார் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி 2-ம் கட்டை பகுதியில் வைத்து போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காரில் மறைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 35 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு  இதன் பெறுமதி சுமார் 36 இலட்சம் என தகவல் தெரிவிக்கின்றது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.