இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை ரூபாய் அமெரிக்க டொலின் மதிப்பிற்கு எதிராக நூற்றுக்கு 0.1 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு இறுதியில் இருந்து 2017 ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியினுள் ஏனைய வெளிநாட்டு பணப் பரிமாற்றத்தினை பார்க்கும் போது இலங்கை ரூபாய் ஜப்பான் யென்களின் மதிப்பிற்கு எதிராக நூற்றுக்கு 0.6 வீதத்திலும், கனேடிய டொலரின் மதிப்பிற்கு எதிராக நூற்கு 2.0 வீதத்திலும், அவுஸ்திரேலிய டொலரின் மதிப்பிற்கு எதிராக நூற்றுக்கு 1.7 வீதம் மற்றும் யூரோவின் மதிப்பிற்கு எதிராக 0.6 வீதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கை ரூபாய் இந்த காலப்பகுதியினுள் ஸ்ரேலிங் பவுண்ட்களின் மதிப்பிற்கு எதிராக நூற்றுக்கு 0.9 வீதம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு எதிராக நூற்றுக்கு 0.2 வீதத்திலும் மதிப்பேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.