நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். என்ன மாதிரியான அசாதாரண சூழல் நிலவுகின்றது என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும்.
ரஜினி நல்ல மனிதர் சூப்பர் ஸ்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் ஒரு மாநிலத்தில் பணிபுரியும் போது அந்த மாநில விதிகளுக்குட்பட்டு அங்குள்ள தமிழ் கலாசாரம் உணர்வுகளை மதித்து இருக்க முடியும்.
அந்த உணர்வை முதலில் மதிக்கனும். இப்படி உணர்வை மதிக்க தெரிந்தவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். தேவைப்படும்போது கர்நாடகாவிலும் இங்கும் வேறு கருத்துகளை சொல்ல கூடாது.
நாளை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்றோ சொன்னால் கண்டிப்பாக முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.







