நிகழ்ச்சி தொகுப்பாளர் சிமி கார்வெலுக்கு 1999ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தை சிமி கார்வெல் தற்போது தனது டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிமி கார்வெடல ரென்டேவூஸ் வித் சிமி கார்வெல் என்ற நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தார்.
இதில் ஜெயலலிதா தான் கடந்து வந்த பாதை, தனது சுக துக்கங்கள், தனது குடும்பம் மற்றும் தனது அரசியல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியிருப்பார்.
சினிமா பாடல்கள், தான் யாருடைய ரசிகை, பிடித்த விளையாட்டு என அனைத்தையும் பகிர்ந்து கொண்டிருப்பார். அந்த நேர்காணல் நிகழ்ச்சி இன்று வரையும் பலராலும் பார்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
அதுபோன்ற ஒரு நேர்காணலை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மீண்டும் கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அதில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வெளியான நேர்காணலின் முதல் பகுதி அருமையாக இருந்தது. இரண்டாம் பாகத்தை காண ஆர்வமுடன் உள்ளேன். தான் கொடுத்த நேர்காணல்களில் இதுவே சிறந்ததது என பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடல் பாடியது அனைவராலும் விரும்பப்பட்டுள்ளது என பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.







