தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே விமல், நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில், அவரது மனைவி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனது கணவரால் அரச வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என விமலின் மனைவி சஷி வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை நீங்கள் எப்படி சந்தித்தீர்கள்?
விமல் அரசியலில் 1994 ஆம் ஆண்டு நுழைந்தார். அந்த நேரத்தில் எனது சகோதரர்களில் ஒருவருடன் விமல் எனது வீட்டுக்கு வந்தார். அப்போதே நான் அவரை சந்தித்தேன்.
உங்களுடைய சகோதரர் யார்?
எனது சகோதரரின் பெயர் அஜித் குமார. அரசியல் செயற்பாடுகளுக்காக விமல் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவார் என்றும் சஷி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இவ்வாறான ஒரு நேர்முகத் தேர்வு உங்களுக்கு தேவையா என சஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர், விமலின் அரசியல் வாழ்விற்கு 1994 இல் இருந்து 2017 வரையில் ஒரு நிழலாகவே இருந்து வருகின்றேன் என சஷி பதிலளித்துள்ளார்.
விமலின் கைது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என சஷியிடம் கேள்வி எழுப்பிய போது,
எனக்கு நன்றாகவே தெரியும். நாட்டை நேசிக்கும் அரசியல் வாதிகள் சிலரே உள்ளனர். இந்த நிலையில் எனது கணவனை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் நாட்டில் எனது கணவனின் பெயரில் எந்த சொத்தும் இல்லை என விமலின் மனைவி தெரிவித்துள்ளார்.
மேலும், அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய நபர்களின் பெயர் பட்டியல் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, இது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.