முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பின்னடைவு மற்றும் தோல்விகளால் மஹிந்த சோர்வடைந்துள்ளார். இதன் காரணமாக ஓய்வு குறித்து கலந்தாலோசித்து வருகிறார்.
ஓய்விற்கு முன்னர் தனக்கு பதிலாக அரசியல் வாரிசொன்றை மஹிந்த நியமிக்கவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதற்காக இரண்டு மாதங்களை வழங்குமாறு தனது குடும்பத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வாரிசு யார் என்பதனை ஊடகவியலாளர் சந்திப்பு பகிரங்கப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் குடும்பத்தின் சிலரை அழைத்ததன் பின்னர் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் கோத்தபாய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச அவ்விடத்தில் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நாமல் தனது ராஜபக்ச குடும்பத்தில் அனுமதி கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.