நாமல் ராஜபக்ஸவின் முகநூல் நாடகம்..! அம்பலமாகும் உண்மை!!

நாமல் ராஜபக்ஸ முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் மூலம் தனது பிரச்சாரத்தினை மேற்கொள்ள பெரும் முயற்சிகளை செய்து வருவதில் வல்லவராக திகழ்கின்றார்.

தங்களது குடும்பத்தவர் யாரவது விசாரணைக்காக அழைக்கப்படும் போது அது தொடர்பிலான செய்தியினை அவரது முகப்புத்தகத்தில் காணக்கூடியவாறு உள்ளது.

அதேபோலவே அவரது தாயான ஷிராந்தி ராஜபக்ஸ விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அந்த செய்தியினையும், தனது கருத்தினையும் அங்கு பதிவேற்றி மக்கள் மத்தியில் அனுதாபத்தினை பெறுவதற்கு முனைப்பு காட்டினார்.

இதனை தொடர்ந்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்து மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டதும் உண்டு.

டுவிட்டர் பக்கத்தில் சிலர் சட்ட பரீட்சை எழுதியமை தொடர்பில் கேள்விகளை எழுப்பியதும், அது அவரை மிகவும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டத்தினையும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் அறிந்த விடயமாகும்.

இது மட்டுமல்லாமல் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளியேறியமையை இணைய தளங்களில் செய்தியாக தெரிவித்திருந்தனர். இருந்தாலும் இது வரைக்கும் அது தொடர்பில் முழுமையான விவரத்தினை கூறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

மேலும் நாமல் ராஜபக்ஸ கடந்த 7 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி செய்தியை டுவிட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரித்தமை தொடர்பிலும் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததன.

அத்துடன் அங்கு இடம்பெற்ற பொலிஸாரின் நீர்த்தாரை பிரயோகத்தில் சிக்கிக்கொள்ளாத நாமல் தான் அதில் பாதிக்கப்பட்டதாக முகநூலில் தெரிவித்து அதிலும் நன்றாக மாட்டிக்கொண்டார்.

அங்கு இருந்த சிறு தண்ணீர் போத்தல் ஒன்றினால் தன்னை முழுமையாக நனைத்துக்கொண்டு அதனை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டிருந்தார் என்று ஊடகங்கள் அவரை இரண்டாக்கி விட்டது.

இதேவேளை, இவ்வாறான செயற்பட்டால் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் கருத்துக்களில் எது பொய்..! எது உண்மை..! என்பது தொடர்பில் மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்து கொண்டே செல்கின்றது என்றே கூறவேண்டும்…